Directory

விழுமியக் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

விழுமியக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழுமியக் கல்வி (Values education) என்பது நற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் மற்றவர்களுக்கு கற்பித்தல் என்று பொருள்படும். விழுமியக்கல்வி என்பது நிறுவனம் மற்றும் எல்லா வகையான அமைப்பு சார் நிறுவனங்களிலும் ஒரு செயல்பாடாக விளங்குகிறது.மதிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடத்தைகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், மற்றவர்களின் நீண்டகால நல்வாழ்வுக்காக சிந்திக்கவும், எங்கள் நெறிமுறைகளை வெளிப்படுத்த அனுபவமுள்ள நிலையில், வயதானவர்களுக்கு மற்றவர்களால் வழங்கப்படும் உதவிகள். தனது மற்றும் மற்றவர்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் அங்கீகரிக்கும் பிற மதிப்புகள் மற்றும் நடத்தைகளைப் பெறுதல் இதில் அடங்கும்.[1]

நிறுவனத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் தனிமனித ஒழுக்கம், தனி மனித மதிப்பு, நல்வாழ்வு சுயமதிப்பு போன்றவற்றை முன்னேற்ற விழுமியக் கல்வி கருவியாக அமைகிறது. இதன் ஒரு வரைவிலக்கணம் 'இளைஞர்களுக்கு மதிப்புகளில் ஒரு துவக்கத்தை அளிக்கும் செயல்முறையாகவும் மற்றவர்களுடன் தொடர்புபட்டுச் செயல்படத் தேவையான விதிகளைப் பற்றிய அறிவை அளிப்பதாகவும் மற்றும் சில அடிப்படைக் கொள்கைகளை மாணவர்களின் வளர்ச்சியை நாடி கொண்டுசெல்லும் ஒன்றாகவும் குறிப்பிடுகின்றது. இந்த விதிகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்கான திறன் மற்றும் அதைச் செய்வதற்கான உறுதியான மனநிலையை கொண்டிருப்பதாக் குறிப்பிடுகின்றது.[2] [3][4][5] சில ஆராய்ச்சியாளர்கள் விழுமியக் கல்வி எனும் கருத்தியலை ஒழுக்கக் கல்வி மற்றும் குடியுரிமைக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய கருத்துகளின் ஒன்றிப்பாகப் பயன்படுத்துகின்றனர்.[6] பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், சிறைச்சாலைகளில் விழுமியக் கல்வி கற்பித்தல் பிரதானமாக உள்ளது. விழுமியக் கல்வி என்பது பண்பு, ஒழுக்க மேம்பாடு, மதக் கல்வி, ஆன்மிக வளர்ச்சி, குடியுரிமைக் கல்வி, தனிமனித மேம்பாடு, சமூக மேம்பாடு மற்றும் கலாசார மேம்பாடு போன்றவற்றினை அதன் பல்வேறு அளவுகோள்களில் விபரிக்கும்.

விழுமியக் கல்வி கற்பித்தலில் இரண்டு வகையான அணுகுமுறைகள் உள்ளன.[சான்று தேவை]

  1. விழுமியத்தை கலாசாரம் மற்றும் மத ரீதியான கற்பித்தலில் கற்பித்தல்.
  2. சமூகத்தில் மக்கள் தாங்களாகவே நல்ல நடத்தைகளை கண்டறிந்து கற்றுக் கொள்ளுதல்.

மற்றைய கல்விமுறைகளுடனான பொதுத்தன்மைகள்

[தொகு]
தார்மீக கல்வி

சமூக-சட்ட-மத நெறிகள் போன்ற ஒழுக்கங்கள் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள உதவ வேண்டும். இருப்பினும், எல்லா ஒழுக்கங்களும் பொறுப்பான நடத்தைக்கு வழிவகுக்காது. எந்த ஒழுக்கங்கள் "கெட்ட" ஒழுக்கங்கள் மற்றும் எது "நல்லது" என்பது குறித்து விழுமியக் கல்வியே வழிகாட்ட முடியும். நடத்தையில் மாற்றம் சரி எது தவறு எது என்பது பற்றிய குழப்பமான கேள்விகளால் வருகிறது.[7][8][9][10]

வரையறை

[தொகு]

விழுமியக் கல்வி என்பது நல்ல பண்புகளை மனிதனிடம் நல்ல நடத்தை மாற்றங்களை உருவாக்குதல் என்று பொருள்படும். மனிதனின் ஆன்மிக வளர்ச்சி, தனிமனித முன்னேற்றம், சமூகம் சார்ந்த வளர்ச்சி, தனிமனிதனில் ஏற்படும் கலாசார வளர்ச்சி போன்ற பல உட்கூறுகள் இதில் அடங்கும்.[சான்று தேவை]

கற்பிக்கும் முறைகள்

[தொகு]
  1. படம் மற்றும் ஒலிப்பதிவுகள்
  2. கதைகள்
  3. நேரடி அனுபவங்கள்
  4. விளக்கிக் கூறுகள்
  5. பாடல்கள்
  6. நேரடியாக தெரிந்துகொள்ளல்
  7. நூல்கள் வாசித்தல்

மாற்றங்கள்

[தொகு]

தனிமனித நடத்தை மேம்பாடு வளரும் சமூகத்தில் அமைதி நிலவி சமாதான சமுதாயம் உருவாகும்.

மேற்கோள்

[தொகு]
  1. Powney, J., Cullen, M-A., Schlapp, U., Johnstone, M. & Munn, P. (2127). Understanding value education in the primary school. York: Reports Express. p. vii
  2. David Aspin (2000) However, the meaning of "initiation into values", "mode of relating to other people", "apply intelligently" and a "settled disposition" needs to be clarified. It is also useful to point out that values education can be conducted with people of any age. A clarification of some key terms in values discussions, in M. Leicester, C. Modgil & S. Modgil (Eds.), Moral education and pluralism: Education, culture and values (Vol. 4, pp. 171–80). London: Farmer Press.[1] பரணிடப்பட்டது 13 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  3. Cheng, R. H. M., Lee, J. C. K. & Lo, L. N. K. (2006). Values education for citizens in the new century: meaning, desirability and practice. In R. H. M. Cheng, J. C. K. Lee & L. N. K. Lo (Eds.), Values education for citizens in the new century. pp. 1–35. Sha Tin: The Chinese University Press.
  4. Mei-ling Ng, M. (2006). Valuation, evaluation, and value education – On acquiring the ability to value: A philosophical perspective. I R. H. M. Cheng, J. C. K. Lee & L. N. K. Lo (Eds.), Values education for citizens in the new century. pp. 49–66. Sha Tin: The Chinese University Press.
  5. Taylor, M. (2006). The development of values through the school curriculum. R.H.M. Cheng, J.C.K. Lee & L.N.K. Lo (Eds.), Values education for citizens in the new century. pp. 107–31. Sha Tin: The Chinese University Press.
  6. Taylor, M. (1994)
  7. Sharp, A M (1984) Philosophical teaching as moral education. Journal of Moral Education, Vol 13, No 1.
  8. Rowe, D and Newton, J (1994) You, me, us! Social and moral responsibility for primary schools. Citizenship Foundation, London.
  9. Lipman, M (1987) Ethical reasoning and the craft of moral practice. Journal of Moral Education, Vol 16, No 2.
  10. Fisher, R (1994) Moral education and philosophy in schools. NAVET Papers Vol X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுமியக்_கல்வி&oldid=4051610" இலிருந்து மீள்விக்கப்பட்டது