விக்கிப்பீடியா:அகேகே
இந்தக் கட்டுரை ஒரு நிபுணர் மூலம் அங்கீகாரம் அல்லது சரிபார்ப்பு செய்யப்படல் வேண்டும். தயவு செய்து இந்த கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேலும் விவரங்களுக்கு பேச்சு பக்கத்தைப் பார்க்கவும். |
இந்த விக்கிப்பீடியா பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த விக்கிப்பீடியா பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அகேகே)
[தொகு]எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது?
[தொகு]தமிழில் தட்டச்சு செய்யும் முறை பற்றி சுருக்கமாக விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சிலும், சற்று விரிவாக தமிழ்த் தட்டச்சு முறைகளிலும் எழுதி உள்ளது.
மென்பொருளை நிறுவ அனுமதி இருந்தால்
[தொகு]- தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்99 விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்சு செய்ய உதவும்; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும். மேலும் அறிய தமிழ்99 கட்டுரையைப் பார்க்க.
- தமிழ்99 விசைப்பலகை உருவரையை எ-கலப்பை (மின்- கலப்பை) என்ற கூட்டு மென்பொருள் பதிவிறக்கம் மூலம் பெறலாம். தமிழ்99 -ஐ பயன்படுத்தி எளிதாகத் தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். மேலும் அறிய எ-கலப்பை கட்டுரையைப் பார்க்க.
- Tamilkey என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவித் தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, எ-கலப்பை நிறுவ இயலாத லினக்ஸ் இயங்குதளங்களில், பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
- முரசு அஞ்சல் ( முரசு அஞ்சல் பழைய பக்கம்) போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி நீவிர் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
மென்பொருளை நிறுவ அனுமதி இல்லையெனில்
[தொகு]- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு: கூகிள் உள்ளீட்டு கருவியை பதிவிறக்கம் செய்யலாம். இது ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு எழுத்து மாற்றம் (transliteration) செய்யும் கருவி. இது ஒலிப்பியல் (phonetic) மற்றும் எழுத்து மாற்றம் (transliteration) முறையில் உள்ளீட்டை பெற்றுக் கொள்ளும். கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியை பதிவிறக்கம் இல்லாமல் உலாவி வழியாகவும் பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
- மைக்ரோசாப்டின் பாஷை இந்தியாவில் தமிழ் மொழி பதிவிறக்கத்தில் தமிழ் 99 தட்டச்சு பலகையும், அஞ்சல் திட்டம் (ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு) எழுத்து மாற்ற (transliteration) கருவியும் உண்டு. இதை பதிவிறக்கம் இல்லாமல் உலாவி வழியாகவும் பயன் படுத்தலாம். மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும் பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
- மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (எடுத்துக்காட்டாக வலை உலாவு நிலையங்களில்) இணையத்தளங்கள் மூலம் இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.
- ஆங்கில ஒலியியல் முறையில் விண்டோஸ் இயங்குதளத்தில் இண்டநெட் எக்ஸ்புளோளர் உலாவியூடாக தமிழை உள்ளீடு செய்தல் எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚ யூனிக்கோட் முறையில் இந்த இணையத்தளத்தில் தட்டச்சு செய்யலாம்‚ அவ்வை ரோமனைஸ்டு முறையிலும் அவ்வை தட்டச்சு முறையிலுமான விசைப்பலகையில் இந்த இணையத்தளத்தில் தமிழைத் தட்டச்சு செய்யலாம்.
- * Voice on Wingsன் விரிவான தமிழ்த் தட்டச்சுக் கையேடு.
எப்படி கட்டுரைகளை எழுதுவது?
[தொகு]இது தொடர்பான விளக்கமான கட்டுரை விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி என்பதைப் பாருங்கள்.
எப்படி புதிய பக்கத்தை உருவாக்குவது?
[தொகு]நீங்கள் விரும்பும் தலைப்பிலான பக்கத்தை உருவாக்கும் முன், முதலில் அப்பக்கம் விக்கிபீடியாவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவ்வாறு உறுதி செய்ய, விக்கிபீடியா தேடு பெட்டியில் உங்கள் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டுச் செல் பொத்தானை அழுத்துங்கள். அந்த தலைப்பிலானப் பக்கங்கள் தேடுதல் முடிவில் வர வில்லையெனில், நீங்கள் புதிய பக்கத்தை உருவாக்கத் தொடங்கலாம்.
மேலும் விரும்பினால் நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பாவிப்பரானால் கூகிள்பீடியாவை நிறுவி கூகிள் தேடலொன்றை மேற்கொண்டு கட்டுரை இல்லையென்பதை உறுதிப் படுத்திவிட்டுப் பின்னர் கட்டுரைகளை உருவாக்கலாம்.
விக்கிபீடியா தேடு பெட்டி வழியாக
[தொகு]"விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க விடுதலை என்ற சொல்லை விக்கிபீடியா தேடு பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லையேனில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிகப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
எளிய முறை
[தொகு]பின்வரும் பெட்டியினுள் நீங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பினை உட்புகுத்தி கீழே உள்ள பொத்தானை அழுத்தவும். அதன் பின் வரும் ஒரு கட்டத்தினுள் அக்கட்டுரையை உள்ளீடு செய்து சேமிக்கவும்.
உலாவியிலிருந்து நேராக
[தொகு]"விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க http://ta.wikipedia.org/wiki/விடுதலை என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar) உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
எப்படி படிமமொன்றை கட்டுரையில் இணைப்பது?
[தொகு]இது தொடர்பான விளக்கமான கட்டுரை விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம் என்பதைப் பாருங்கள்.
நான் உருவாக்கிய கட்டுரை ஏன் நீக்கப்பட்டது?
[தொகு]நீங்கள் உருவாக்கிய கட்டுரை நீக்கப்பட்டால் விக்கிப்பீடியா:விரைந்து நீக்குதலுக்கான காரணங்கள் எனும் பக்கத்தைக் காணுங்கள்.
மேலும் அறிய
[தொகு]மேலும் அறிந்துகொள்ள இவற்றையும் காணுங்கள்